Connect with us

விஜய் சினிமாவுக்கு வர உதவியதே ரஜினிதானா?… அதை செய்த பின்னர்தான் SAC சம்மதித்தாராம்.. வாங்க என்னன்னு பார்ப்போம்!

CINEMA

விஜய் சினிமாவுக்கு வர உதவியதே ரஜினிதானா?… அதை செய்த பின்னர்தான் SAC சம்மதித்தாராம்.. வாங்க என்னன்னு பார்ப்போம்!

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது முழுக்க முழுக்க அவர் நடித்த காதல் படங்களில்தான் அவர் நடித்துவந்தார். அதற்கு முன்னால் அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனோடு அவர் பணியாற்றிய படங்கள் எல்லாம் கிளாமர் தூக்கலான படங்கள்தான். அந்த படங்களை எல்லாம் இப்போது விஜய் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்திருப்பார்.

விஜய் குழந்தை நட்சத்திரமாகவே வெற்றி என்ற படத்தில் அறிமுகமாகி விட்டார். ஆனாலும் அவர் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை தனது தந்தையிடம் வெளிப்படுத்திய போது அவர் சம்மதிக்கவேயில்லையாம். விஜய்யும் தன்னுடைய அம்மாவை வைத்து எல்லாம் பரிந்துரை செய்தாராம். ஆனாலும் SAC அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லையாம்.

   

இதனால் தந்தையை வழிக்குக் கொண்டுவரவும், தன்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் விஜய் ஒரு எமோஷனலான காட்சியில் நடித்துக் காண்பித்தாராம். அந்த காட்சி அண்ணாமலை படத்தில் ரஜினி ஆவேசமாக சரத்பாபுவிடம் சபதம் எடுக்கும் காட்சியாம். அந்த காட்சியை அவர் நடித்துக் காட்டியபின்னர்தான் விஜய்யால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை SAC பெற்றாராம். இதை விஜய்யே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இப்படி விஜய் சினிமாவுக்கு வர ரஜினியும் மறைமுகமான ஒரு காரணமாக இருந்துள்ளார்.

 

 

Continue Reading
To Top