Categories: சினிமா

சிவகுமாரை பிழைக்க தெரியாதவன் என்று கூறிய MGR… பதிலுக்கு அவர் செய்தது…

Spread the love

சிவக்குமார் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகராவார். இவரின் இயற்பெயர் பழனிசாமி என்பதாகும். இவர் சினிமா மட்டும் இல்லாது பல தொலைக்காட்சி தொடர்களிலும் பல முன்னணி கதாநாயகர்கள் திரைப்படத்தில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். சிவகுமார் 1965 ஆம் ஆண்டு எஸ் எஸ் ராஜேந்திரனுடன் காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற பக்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் சிவகுமார். அதற்கு காரணம் என்னவென்றால் முருகனின் வேடம் இவரது தோற்றத்திற்கு அச்சுஅசலாக பொருந்தியது. இவர் முருகன் வேடமிட்டதும் முருகனையே நேரில் கண்டது போல் இருக்கிறது என்று மக்கள் கூறுவர். அதனால் பல பக்தி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சிவக்குமார்.

அடுத்ததாக உயர்ந்த மனிதன், அன்னக்கிளி, ரோஜாப்பூ ரவிக்கைக்காரி, அக்னிசாட்சி, வண்டி சக்கரம், இன்று நீ நாளை நான், வெள்ளிக்கிழமை விரதம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் சிவக்குமார்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஆர் முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், அர்ஜுன், அஜித்குமார், விஜய், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமையை பெற்றவர் சிவகுமார்.

இவரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றனர். இவரது மருமகள்தான் தமிழில் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்புகளுக்காக மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் சிவகுமார். அதற்காக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி கணேசன் உடன் உயர்ந்த மனிதன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு கிடைத்திருக்கிறது. அப்போதுதான் அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டம். இப்போது எம்ஜிஆர் சிவகுமாரை போன் செய்து நான் ஒரு புது படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அப்போது சிவகுமார் ஏவிஎம் தயாரிப்பில் நடித்து கொண்டிருக்கிறேன். நான் உங்கள் படத்தில் நடிப்பதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஷூட்டிங் இல்லாத நாட்களில் என்னுடைய படத்தில் வந்து நடிக்கலாம் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார்.

உடனே சரி என்று சொன்ன சிவகுமார் ஏவிஎம் நிறுவனத்திடம் போய் கேட்டிருக்கிறார். அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அனுமதி வழங்கவில்லை. அதனால் அந்த படத்தை தவற விட்டு விட்டார் சிவகுமார். அந்த நேரம் எம்ஜிஆர் சிவகுமாரை நன்றாக திட்டியிருக்கிறார். என்னப்பா பிழைக்க தெரியாத ஆளாக இருக்கியே பல படங்களில் நடித்தால் தான் நீ வளர முடியும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் உயர்ந்த மனிதன் படத்தை நம்பி இந்த சிவக்குமாருக்கு பேரடி விழுந்தது. ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறார் சிவக்குமார். அப்போது எம்ஜிஆர் சொன்னது நினைவுக்கு வரவே உடனே அவரை போய் சந்தித்திருக்கிறார் சிவக்குமார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் நடித்த காவல்காரன் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கும் கதாபாத்திரத்தை சிவக்குமாருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். அப்படியே அதில் நடித்து பிரபலமாக ஆகி இருக்கிறார் சிவக்குமார்.

admin

Recent Posts

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

4 minutes ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

6 minutes ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

9 minutes ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

11 minutes ago

கோமாவிலிருந்து கண்விழித்ததும் பெண் கேட்ட முதல் கேள்வி… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.. கடைசியில தான் டுவிஸ்ட்டே இருக்கு..!!

பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…

15 minutes ago

போதையில் தள்ளாடிய மான்! நடுரோட்டில் செய்த விசித்திர செயல் – பிரான்சில் போலீசாருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..!!

பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…

19 minutes ago