தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த எம்ஜிஆர் நடித்த 136 படங்களும் தமிழ் படங்கள் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். மலையாளி ஆனா எம்ஜிஆர் நடித்த முதல் மற்றும் ஒரே படம் ஜெனோவா. 1953 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தை மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்தனர். நாயகன் எம்ஜிஆர், நாயகி சரோஜா இருவரும் இரு மொழிகளிலும் நடித்தனர். வில்லனாக தமிழில் பி எஸ் வீரப்பா நடிக்க மலையாளத்தில் அந்த வேடத்தை ஆலப்பி வின்சென்ட் செய்திருந்தார். ஜெனோவா சஜாத்திர கதை. பொதுவாக இந்திய ராஜா ராணி கதைகளில் வருகிறவர்கள் இந்து கடவுள்களை கும்பிடுபவர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஜெனோவா கதையில் நாயகி ஜெனோவா கிறிஸ்த்துவர். மேரி மாதா முன் நின்று துணை நீயே தேவ தாயே என பாடும் காட்சியும் இந்த படத்தில் உண்டு. இந்த பணத்தில் எம்ஜிஆரின் பெயர் சிப்ரசோ , நாயகியின் பெயர் ஜெனோவா, எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணியின் பெயர் அன்னாஸ். கதைப்படி எம்ஜி ஆர் ஒரு நாட்டின் அரசர். பக்கத்து நாட்டு இளவரசி ஜெனோவாவின் அழகையும் குணத்தையும் கேள்விப்பட்டு தனது அமைச்சர் மற்றும் பரிவாரங்களுடன் அவளை மணக்க செய்வார்.

அந்த சமயத்தில் இளவரசி தனது தோழிகளுடன் சென்று கொண்டிருப்பார். இதனை அறிந்து அவரை பார்க்க தனியாக குதிரையில் எம்ஜிஆர் துரத்தி செல்வார். அப்போது ஒரு விபத்து ஏற்பட அப்போது இளவரசையை எம்ஜிஆர் தான் காப்பாற்றுவார். தன்னை சாதாரண வீரனாக அறிமுகப்படுத்திக் கொண்டு பிறகு அவரை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் தான் எம்ஜிஆர் நடித்த ஒரே ஒரு மலையாள திரைப்படமாகும்.
