மனோரமாவை அழைத்து கண்டித்த எம்ஜிஆர்.. மகனால் உருவான பகை.. அப்படி என்னதான் நடந்தது..?

By Nanthini on அக்டோபர் 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த பழம்பெரும் நடிகையாக இருந்தவர் தான் நடிகை மனோரமா. தமிழ் திரையுலகால் தமிழ் திரைப்பட ரசிகர்களால் நடிகை மனோரமா அவர்கள் ஆட்சி என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரின் உண்மையான பெயர் கோபி சாந்தா. இவர் 12 வயதில் நடிப்பு தொழிலில் இறங்கினார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜனாகிய ஒரு தான் இவருக்கு மனோரமா என்று பெயர் வைத்தனர். இவர் ஆரம்பத்தில் வைரம் நாடக சபா நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். முதன்முதலாக மனோரமா மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழி திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்தார்.

   

பிறகு பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் கதிகலங்க வைத்தது. இவருடைய இறப்பு தற்போது வரை கூட யாராலும் ஈடு கட்ட முடியாது. நடிகை மனோரமா அவர்கள் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது மற்றும் டாக்டர் பட்டம் போன்ற பல விருதுகளை தன்னுடைய நடிப்பு திறமைக்கு வாங்கியுள்ளார். இவர் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனால் இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் உள்ள பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

   

 

 

ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர். இவர் நாடகங்களில் நடித்த எம் எஸ் ராமநாதன் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற மனோரமா தனது கைக்கு குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு சென்று பிறகு அங்கு தான் தனிமையில் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் பூபதி எம்ஜிஆருக்கு நெருக்கமான எழுத்தாளர் ஒருவரின் உறவினரை காதலித்துள்ளார்.

இது எம்ஜிஆர்க்கு தெரிய வர உடனே மனோரமாவை அழைத்து உன் மகன் இவ்வாறு செய்வது தவறு. அவனை நீ கண்டித்து வை என்று காட்டமாக கூறியுள்ளார். விருப்பம் இல்லாத இடத்தில் காதலிப்பது தவறு கல்யாணம் செய்ய சொல்லி நான் கட்டாயப்படுத்த முடியாது , நீயே உன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிடு என்று எம்ஜிஆர் கூறுகிறார். ஆனால் மனோரமாவின் மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மோசமாக இருந்த நிலையில் பிறகு மனோரமா சொந்தத்தில் ஒரு பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். இப்படி தன் மகனார் எம்ஜிஆர் உடன் மனோரமா பகைக்கு ஆளானார்.

author avatar
Nanthini