நடிக்க கூடாதுன்னு தான் கல்யாணம் பண்ணேன், 6 குழந்தைகளை பெத்துக்க ஆசைப்பட்டேன், ஆனா… மனம் திறந்த சரண்யா பொன்வண்ணன்..!

By Nanthini on அக்டோபர் 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் எட்டு மூலம் சினிமாவில் அறிமுகமானார். வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

   

இந்த நிலையில் சரண்யா பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி தான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 6 குழந்தைகளை பெற்றுக் கொண்டு வளர்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் எனக்குப் பிறந்தது இரண்டு பெண்கள் தான். குடும்பத்தை பார்த்துக் கொண்டு பிள்ளைகளை வளர்த்துக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஒரு வலையில் நான் அடைந்து விடக்கூடாது என்று என் கணவர் கூறி நீ திறமையானவர் நீ சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.

   

 

என் கணவர் உருவத்தில் என் அப்பாவை தான் நான் பார்க்கிறேன். நான் எந்த இடத்திலும் துவண்டு விடக்கூடாது என்பதற்காக என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். தொடர்ந்து ஒரு வாரம் சூட்டிங் நடந்தால் கூட அவ்வளவுதான் முடிந்துவிடும் முடிந்து விடும் என்று கூறியே என்னை ஊக்கப்படுத்துவார். அன்று அவர் இல்லை என்றால் இன்று இந்த இடத்தில் நான் இருந்திருக்க மாட்டேன். என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் தான் உள்ளார் என்று சரண்யா பேசியுள்ளார்.

author avatar
Nanthini