ஒரு மணி நேரமா பாட்டு எழுத திணறிய வாலி.. கலைஞர் சொன்ன வரிக்கு.. எம்ஜிஆர் கொடுத்த எதிர்பார்க்காத பரிசு..!

By Nanthini on அக்டோபர் 14, 2024

Spread the love

இந்த நிலையில் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் 1970 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் என் தங்கம். இந்த திரைப்படத்தை மேகலா பிக்சர்ஸ் சார்பில் முரசொலி மாறன் தயாரித்திருந்தார். உணர்வு பூர்வமான அண்ணன் தங்கை கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழக அரசின் மூன்று விருதுகளை பெற்றிருந்தது. மேலும் கருணாநிதியும் முரசொலி மாறனும் கடன் சிக்கலில் ஆழ்ந்த இருப்பதை அறிந்த நடிகர் எம்ஜிஆர் எங்கள் தங்கம் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அண்ணாதுரை மற்றும் முரசொலி போன்றவர்களும் இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய சூப்பர் ஹிட் கொடுத்த இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பற்றி மறைந்த கவிஞர் வாலி ஒருமுறை பேசியுள்ளார்.

   

அதாவது படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்து பாடும் காதல் பாட்டு ஒன்றை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை இசையமைப்பாளர் விஸ்வநாதன் நான் அளவோடு ரசிப்பவன் என்ற வார்த்தையை சொல்லி அடுத்த வரியை என்னிடம் எழுத கூறினார். நான் வெற்றிலை பாக்கு போட்டு அடுத்த வரியை யோசித்தபோது ஒண்ணுமே வரவில்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த கலைஞர், என்னையா வாலி பாட்டு எழுதறியா என்று கேட்டார். அதற்கு நானும் அளவோடு ரசிப்பவன் என்ற வரியை கூறி அடுத்த வரி எனக்கு தோன்றவில்லை என்று கூறினேன். பிறகு விசு ட்யூனை வாசி என்று கூறிவிட்டு எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று அடுத்த வரியை நொடிப்பொழுதில் கலைஞர் கூறினார்.

   

 

அந்தப் பாட்டு எம்ஜிஆருக்கு கலைஞர் எழுதிய பாட்டு என மெய்சிலிர்த்து போன வாலி அந்த வரியை கேட்டதும் அசந்து போய்விட்டார். காரணம் என்னவென்றால் ஒரு மணி நேரம் வெற்றிலை பாக்கு போட்டு யோசித்து என் கன்னம் எல்லாம் விலகி விட்டது. கலைஞர் வந்ததும் எழுதிவிட்டார் என்று பிறகு பத்து நாள் கழித்து எம்ஜிஆரை ஸ்டூடியோவில் வாலி பார்த்த போது எம்ஜிஆர் தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், நான் என்ன அண்ணா, ஏதாவது விஷயமா என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆர் அளவின்றி கொடுப்பவன் நான் என்று என்னைப் பற்றி எழுதி விட்டாயே என்று கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது வாலி அந்த முத்தத்தை கலைஞருக்கு போய் கொடுங்கள் என்று சொன்னதாக வாலி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.