தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு பி எப் பணம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகை தனியாக சேமிக்கப்படுகின்றது. அதே அளவு பங்களிப்பு நிறுவனத்தாலும் வழங்கப்படுகின்றது. PF பணத்திற்கு வட்டி வருமானமும் கிடைக்கின்றது. இப்படியான நிலையில் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க நீங்கள் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை.
அதற்கு பதில் மத்திய அரசின் உமாங் செயலி மூலம் உங்களுடைய pf பணத்தை எளிதில் எடுத்துக் கொள்ள முடியும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக மத்திய அரசு இந்த செயலியை செயல்படுத்தி வருகின்றது. அட்வான்ஸ் தொகை மற்றும் ஓய்வூதிய உரிமைகளையும் ஆன்லைன் மூலம் நிர்வகிக்க முடியும். உமாங் செயலியை தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலமாக pf உறுப்பினர்கள் வீட்டில் இருந்து கொண்டே பி எப் தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.
- முதலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து உமாங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு செயலியை திறந்து ஆதார் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு உள்ளே நுழைந்த பிறகு பட்டியலில் இருந்து EPFO சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர் Rise Claim விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தற்போது உங்களுடைய UAN நம்பர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி நம்பரையும் பதிவிட வேண்டும்.
- நீங்கள் எடுக்க விரும்பும் வகையை தேர்ந்தெடுத்த தேவையான விவரங்களை பூர்த்தி செய்து உங்களுடைய கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
- அதன் பிறகு உடனே உங்கள் கோரிக்கைக்கான ஒப்புகை எண் கிடைக்கும். இந்த எண்ணின் உதவியுடன் உங்கள் உரிமை கோரல் நிலையை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
- இவ்வாறாக உங்களுடைய pf பணத்தை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக நீங்கள் எளிதில் எடுத்துக் கொள்ள முடியும்.