காதல் பாட்டில் அரசியல் தேவையா?.. கண்டிப்போடு கேட்ட இயக்குனருக்கு பாடல் வரிகளால் பதிலடி கொடுத்த கண்ணதாசன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்தவர்தான் கண்ணதாசன். கிளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். காலங்கள் பல கடந்தாலும் கண்ணதாசன் எம்ஜிஆருக்காக எழுதிய பல பாடல்கள் இன்றைய ரசிகர்கள் ரசிக்கும்படி உள்ளது. வாலி வருவதற்கு முன்பே எம்ஜிஆர் இன் அனைத்து அரசியல் பாடல்களிலும் தனது வார்த்தை ஜாலத்தை வைத்து வெற்றியை கொடுத்தவர்தான் கண்ணதாசன். அதேபோல கண்ணதாசன் மீது அதிகமான நட்பு வைத்திருந்த எம்ஜிஆர் அவரை அரசவை கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார்.

இதனிடையே எம்ஜிஆர் நடிப்பில் உருவான பணத்தோட்டம் என்ற படத்தில் ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். அந்தப் பாடலைக் கேட்ட படத்தின் இயக்குனர் சங்கர் நீங்க எம்ஜிஆரின் கட்சிக்காரர் ஆக இருக்கலாம் அதற்காக காதல் பாடலில் கூட அரசியலை புகுத்த வேண்டுமா என்று கேட்டுள்ளார். உடனே கண்ணதாசன் இது எம்ஜிஆர் படம் அவருக்கு எப்படி பிடிக்குமோ அதற்கு ஏற்றது போல பாடல் எழுதியுள்ளேன் ஏன் உங்களுக்கு இந்த பாடல் பிடிக்கவில்லையா என்று கேட்டுள்ளார். உடனே சங்கர் பாடல் ரொம்ப அருமையா இருக்கு ஆனா காதல் பாட்டில் எதற்கு அரசியல் என கேட்கிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு கண்ணதாசன் இது அரசியல் மட்டுமல்ல எம்ஜிஆரின் இயல்பை அப்படியே பாடல் ஆக்கியுள்ளேன். பாரி வள்ளல் போல அள்ளித் தரும் மனிதர், சேர நாடு தந்த செந்தமிழ் அறிஞர். இதனால் அவரைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளேன் என்று கூறிய கண்ணதாசன் இந்த பாடல் காட்சியில் எம்ஜிஆரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பினார். பாடல் தான் பணத்தோட்டம் படத்தில் இடம் பெற்ற பேசுவது கிளியா, இல்லை பெண்ணரசி மொழியா, கோவில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா என்ற பாடல். இந்தப் பாடல் காலம் கடந்தும் இன்றும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago