தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். அதனால் ‘கல்லைக் கூட மிகச்சிறப்பாக நடிக்க வைக்கக்கூடியவர் பாரதிராஜா’ என்று அவரைப் பற்றி பெருமையாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் தன் மகனை அவரால் ஒரு வெற்றிகரமான நடிகராக உருவாக்க முடியவில்லை.
அப்பாவைப் போலவே இயக்குனர் ஆக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்த மகன் மனோஜைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அவரை பிரம்மாண்டமாக தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அந்த படம் ப்ளாப் ஆனது. மனோஜால் நடிகராக பெரியளவில் சாதிக்க முடியாமலேயே போனது.
அதன் பின்னர் வெளிநாடு சென்று திரைக்கதை மற்றும் இயக்கம் குறித்த படிப்பு ஒன்றை முடித்துவிட்டு வந்த மனோஜ் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். எந்திரன் படத்தில் நிறையக் காட்சிகளில் ரஜினிகாந்துக்கு டூப்பாக நடித்திருந்தார். ’மார்கழி திங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் மனோஜுக்கு தனது தந்தையின் ‘கல்ட்’ கிளாசிக் படமான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்து அதில் சிம்புவை நடிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர் அளித்த பல நேர்காணல்களில் கூட இதைப் பற்றி அவர் கூறியுள்ளார். ஆனால் ஏனோ, அந்த படம் கடைசி வரைக் கைகூடவேயில்லை. இப்போது அவரின் நிறைவேறாத ஆசையாகவே அது முடிந்துவிட்டது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…