Categories: சினிமா

உங்களோட அந்த படத்ததான் எம் ஜி ஆர் விரும்பி பாப்பாரு… விஜயகாந்திடம் சொன்ன வி என் ஜானகி!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் சில படங்களில் நடித்தார்.  தொடக்கத்தில் அவருக்கு கதாநாயகன் வேடம் எளிதாகக் கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை. அதனால் அவர் சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருக்கவேண்டிய சூழல் உருவானது.

அதன் பின்னர் எஸ் ஏ சந்திரசேகரன், சுந்தர் ராஜான் உள்ளிட்ட இயக்குனர்களோடு கூட்டணி அமைத்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து ரஜினி, கமலுக்கு அடுத்து மூன்றாவது சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்தார்.

80 களில் பல ஆக்‌ஷன் படங்களில் நடித்த விஜயகாந்த் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இந்நிலையில் எம் ஜி ஆருக்கு பிடித்த விஜயகாந்த் நடித்த படம் எது என்பது விஜயகாந்தே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “எம் ஜி ஆரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். நான் நடிகனாக வளர்ந்து நடித்த போது அதிகமாக அவரோடு பழக்கமில்லை. அவர் மரணத்துக்குப் பிறகு அவருடைய மனைவி வி என் ஜானகியோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவர் என்னிடம் “நீங்கள் நடித்த உழவன் மகன் திரைப்படம் எம் ஜி ஆருக்கு ரொம்ப பிடிக்கும்.

அதில் நீங்கள் மாட்டுவண்டி ஓட்டிகிட்டே பாடிவரும் பாடலை விரும்பி பார்த்தார்” எனக் கூறினார். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

எம் ஜி ஆர் காலமாவதற்கு சில மாதங்கள் முன்புதான் விஜயகாந்தின் உழவன் மகன் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

3 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

3 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

3 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

3 மணத்தியாலங்கள் ago