#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘அயலான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எஸ்கே 21 திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலாக காத்திருக்கின்றனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை களத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் ஆர்மி பின்னணியை கொண்டு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK 23 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது படத்தை பற்றிய அப்டேட்டுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி தென்னிந்தியாவின் லேட்டஸ்ட் சென்சேஷனாக வலம் வரும் நடிகை மிருனாள் தாகூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க சீரியசான படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் நடித்த நடிகர் வித்யுத் ஜம்வால், ‘ஜில்லா’ திரைப்படத்தில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடிக்க உள்ளனர்.இந்நிலையில் விஜயுடன் நடித்த நடிகர்களை நடிகர் சிவகார்த்திகேயன் வளைத்து போடுவதாகவும், தளபதி இடத்தை அவர் பிடிக்க திட்டம் தீட்டி வருவதாகவும் தற்பொழுது இணையத்தில் பரவலாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தற்பொழுது நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து அடுத்து இரண்டு படங்களுடன் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் அவரை என்கரேஜ் செய்து வருகின்றனர். இதனால் தான் விஜயுடன் நடித்த முன்னணி நடிகர்களை தனது படத்தில் நடிக்க வைத்து தளபதி இடத்தை பிடிப்பதற்காக தான் இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு வருகிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…