அவசரத்துக்கு கிளம்பிய காரில் தூங்கி வழிந்த மந்திரி.. தூங்காமல் இருக்க எம்ஜிஆர் செய்த தந்திரம்..!

By Nanthini on தை 31, 2025

Spread the love

இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்! | எம்ஜிஆர் 100 | 56 -  கேட்காமலேயே கொடுத்தவர்! - hindutamil.in

   

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார்.  இப்படியான நிலையில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்று இரவு அவர் பயணம் செய்ய இருந்த ரயிலை தவறவிட்டார். அடுத்த நாள் அவர் சென்னையில் இருந்தாக வேண்டும். காரிலேயே போக முடிவு செய்தார். கார் ஓட்டுனரை அழைத்து சாப்பிட்டியா என்று கேட்டுவிட்டு இப்போது நாம் சென்னை கிளம்ப வேண்டும் காரை ஒழுங்காக ஓட்டி செல் என்று கூறிவிட்டு ஒரு மந்திரியை டிரைவரின் பக்கத்தில் அமர வைத்துவிட்டு எம்ஜிஆர் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார்.

   

எம்.ஜி.ஆர்., மீது செருப்பு வீசியதும் நாடகமா?

 

 

கார் புறப்பட்டதும் மந்திரியிடம் டிரைவர் தூங்காமல் கார் ஓட்டுகிறாரா என்று பார்த்துக்கொள் என கூறினார். சிறிது தூரம் சென்றதும் அமைச்சர் டிரைவர் மீது தூங்கி விழுந்து இடஞ்சல் செய்து வந்தார். விழித்துக் கொண்ட எம்ஜிஆர் அமைச்சரிடம் டேஷ் போர்ட்டில் இருக்கும் கடலையை பொட்டலத்தை கையில் எடுத்து வைத்துக் கொள், நான் வேண்டும்போது எடுத்து சாப்பிடுகிறேன் என்று கூறினார். பிறகு வேறு வழியில்லாமல் அமைச்சர் சென்னை வரை கடலை பொட்டலத்தை கையில் தூங்காமல் பிடித்து வந்தார். பிறகு கார் ஓட்டுனரும் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் காரை சென்னைக்கு ஓட்டி வந்தார். மந்திரி தூங்காமல் இருக்க எம்ஜிஆர் செய்த தந்திரம் தான் இது.