இயக்குனர் தமிழ் ஒரு நடிகராகவும் இவரை நம்மில் பல பேருக்கு தெரியும். அரசாங்க வேலை என்பது அவ்வளவு எழுத்து யாருக்கும் கிடைத்துவிடாது. சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழ், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்தார். ராமேஸ்வரத்தில் இருக்கும் தனது குடும்பம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சென்னையில் டாக்ஸி டிரைவராக தனது பணியை தொடங்கி பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.

பின் நாட்களில் வெற்றிமாறன் இயக்கத்திலேயே அசுரன் திரைப்படத்தில் ஒரு நடிகராக அறிமுகமாகி தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு ஜெய் பீம், விடுதலை போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவை கதாநாயகனாக வைத்து டானாக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தார்.
இந்தத் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக இவர் அளித்திருந்த பேட்டியில், நாம் முயற்சி செய்வது முக்கியமல்ல அதே நேரத்தில் நமது குடும்பத்தினரையும் பார்த்துக் கொண்டால் அவர்களது நிம்மதியே நமது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமையும் என தன்னம்பிக்கையோடு பேசி இருக்கிறார்
