எல்லா திறமையும் இருந்தும் துரதஷ்டத்தால அவருக்கு அந்தஸ்த்து கிடைக்கல.. பிரபல ஹீரோவை நினைத்து வருந்திய விக்ரமன்..!

By Nanthini on தை 31, 2025

Spread the love

தமிழில் கமர்சியல் திரைப்படங்களை தவிர்த்து சில சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து பலதரப்பட்ட வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் தான் பரத். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட பரத் சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்தார். பிறகு 2003 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தான் பரத் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் அறிமுகத்திலேயே நமக்கு மிகவும் பரிச்சயமான பரத், விஷால் அறிமுகமான செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.

நடிகர் பரத் இத்தனை கோடிக்கு சொந்தக்காரா?.. சொத்து மதிப்பு விவரம் இதோ

   

இவ்வாறு ஆரம்பத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வந்த பாரத் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்த வெயில், சேவல் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு ஒரு நல்ல கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.

   

நடிகர் பரத்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்

 

ஆனால் நேபாளி திரைப்படத்தில் மிகவும் ஆபாசமாக இவர் நடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் ஒரு ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்று முடிவெடுத்து பரத் பழனி மற்றும் திருத்தணி ஆகிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைத்து பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 20 ஆண்டுகளில் 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பரத் ஒரு வெற்றி படத்திற்காக தற்போது வரை ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

Chennai Kadhal streaming: where to watch online?

இப்படியான நிலையில் இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பரத் குறித்து பேசி உள்ளார். அதில், விஜயின் பூவே உனக்காக திரைப்படத்திற்கு முன்பு வரை பரத் ஒரு ஆக்சன் ஹீரோவாக தான் இருந்தார். அதன் பிறகு அவரை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக்கி படம் பண்ணேன். பரத்தை வைத்து ஒரு ஆக்சன் திரைப்படத்தை ட்ரை பண்ணலாம் என்று நினைத்து தான் சென்னை காதல் திரைப்படம் பண்ணோம். ஆனா அது துரதஷ்டவசமாக பெரிதாக போகவில்லை. பரத் ஒரு பெரிய ஹீரோவாக வருவார் என்று நான் நினைத்தேன்.

உடல் நலம் இல்லாத மனைவியை கவனிக்க கேரியரையே தியாகம் செய்த விக்ரமன்!

ஆனால் அவருக்கு லக் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர் ஒரு சிறந்த நடிகர். நல்ல டான்ஸர், நடிப்பிலும் சரி சண்டை காட்சிகளிலும் சரி சிறப்பாக நடிக்க கூடியவர். சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடவே மாட்டார். அவரே தான் பண்ணுவார். சினிமாவுல நல்லா வந்திருக்கக்கூடிய அவர் துரதஷ்டவசத்துல இப்படி சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார் என்று பரத் குறித்து விக்ரமன் எமோஷனலாக பேசியுள்ளார்.