தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி இடத்தை பிடித்து கெத்தாக இருப்பவர் அஜித்குமார். தனக்கு 17 வயதாக இருக்கும் போது கார் ரேசரில் கலந்துகொண்டு தனது கேரியரை ஆரம்பித்தார். தற்போது அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி Good Bad Ugly ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் மே ஒன்றாம் தேதிக்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
![]()
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பொதுவெளிகளில் கடவுளே அஜித்தே என்று அஜித்குமார் ரசிகர்கள் கோஷம் போட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதற்காக ஒரு அறிக்கையை அஜித்குமார் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். என்னை கடவுளே அஜித்தே என்று குறிப்பிட வேண்டாம் தயவு செய்து என் பெயரை மட்டுமே கூறுங்கள் என்று கூறியிருந்தார்.

மேலும் என்னை தலன்னு யாரும் சொல்ல வேண்டாம். அஜித், AK என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து மகிழ்திருமேனியிடம் கேட்கையில் அது குறித்து பதிலளித்த அவர், “பொதுவாகவே இது மாதிரியான அடைமொழிகள் இது மாதிரியான பில்டப் காட்டுவதில் நாட்டம் இல்லாதவர் அஜித். நம்முடைய வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்திருப்போம். நூற்றுக்கு 99 தடவை தூரத்தில் இருந்து பார்க்கும் வரை தான் அழகு.

கிட்ட போய் பார்க்கும் போது தான் நினைத்தது ஒன்றாக இருக்கும் ரியாலிட்டி வேற மாதிரி இருக்கும். நான் வெளிப்படையாக சொல்ல முடியும் அவர் என்னவாக இருக்கிறாரோ ஒரு Jeniune ஆக, kindness ஆக அவருடைய வாழ்க்கை அவருடைய போக்கில் terms இல் வாழனும் ஆசைப்படுகின்ற ஒரு மனிதராகத்தான் பொது வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார்.
