Connect with us

ஷூட்டிங்கில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நடிகை… MGR கொடுத்த பதிலடி…

CINEMA

ஷூட்டிங்கில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நடிகை… MGR கொடுத்த பதிலடி…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தவர் MGR. MGR என்ற ஒற்றை வார்த்தைக்கு அத்தனை மரியாதை இருந்தது. நடிகராக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவும் சிறப்பாக வழிநடத்தியவர் MGR. தனது படங்களினால் பல சமூக சீர்திருத்த கருத்துக்களை திராவிட சிந்தனைகளை எடுத்துரைத்தவர். MGR நடிகனாக இருக்கும் போதே அரசியலில் பற்று கொண்டு திராவிட கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.

   

MGR உடன் பல நடிகைகள் நடித்துள்ளனர். அதில் முக்கியமாக சரோஜாதேவி, ஜெயலலிதாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருப்பார் MGR. இது தவிர லதா சௌகார் ஜானகி போன்ற நடிகைகளுடனும் நடித்திருக்கிறார். இவருடன் நடிப்பதற்காகவே பல நடிகைகள் போட்டி போட்டு வருவர். அப்படி ஒரு திரைப்பட சூட்டிங் இல் நடிகை சௌகார் ஜானகியை கதற விட்டிருக்கிறார் MGR.

   

1962 ஆம் ஆண்டு MGR மற்றும் சரோஜா நடித்த திரைப்படம் தான் மாடப்புறா. இத்திரைப்படத்தில் சௌகார் ஜானகிக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி சூட்டிங்கிற்கு ஏற்கனவே வந்திருந்த சௌகார் ஜானகி கால் மேல் கால் பட்டு உட்காந்திருந்தாராம். அப்போது MGR சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும் அனைவரும் மரியாதை கொடுத்து எழுந்திருக்கின்றனர். அப்போது எழுந்து நின்ற சௌகார் ஜானகி MGR கடந்து சென்றவுடன் மறுபடியும் சூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு எதிராக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து அமர்ந்திருக்கிறார்.

 

பொதுவாகவே MGR அனைவர்க்கும் மரியாதை கொடுப்பார். அதேபோல் தமக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர். உடனே அங்கிருந்த எம் ஆர் ராதாவை அழைத்து இங்க பாருங்க அந்த பொண்ணு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கு அப்படின்னு சொல்லி இருக்கார். உடனே எம் ஆர் ராதா இங்கிலாந்தில பிறக்க வேண்டிய பொண்ணு போல இருக்கு இங்க வந்துருச்சு இருந்தாலும் அது நல்ல பொண்ணு தான் அப்படின்னு சொல்லி இருக்கிறார். இருந்தாலும் மனசு கேட்காத MGR அந்த படத்திலேயே அவர் நடிக்க வேண்டாம் என்று சௌகார் ஜானகியை அந்த படத்தை விட்டு தூக்க சொல்லிவிட்டாராம் MGR. அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் தான் சௌகார் ஜானகியுடன் இணைந்து நடித்திருக்கிறார் MGR. இந்த படம் நல்ல ஹிட் ஆனது. இந்த சம்பவத்தை பற்றி சௌகார் ஜானகி ஒரு நேர்காணலில் பகிர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in CINEMA

To Top