மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படத்தின் மூலமாகவே பெரும் தாக்கத்தையும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் போன்ற உணர்ச்சிகரமான படங்களை எடுத்து பாராட்டுகளை பெற்றவர்.
தற்போது வாழை திரைப்படத்தை தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக இது இருக்கும் என்று மக்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் வாழை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இல் லாரி கவிழ்ந்து விபத்து உள்ளான காட்சி படமாக்கப்பட்டிருக்கும். இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இரண்டு கால்களையும் இழந்த பனிமாலா என்ற பெண்மணி செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அவர் கூறியது என்னவென்றால் வாழை திரைப்படத்தில் நடந்தது எல்லாமே உண்மை சம்பவம் தான். நானும் அந்த விபத்தில் மாட்டிக் கொண்டேன். அப்போது என்னுடைய உடம்பு வெளியே இருந்தது கால் மட்டும் உள்ளே மாட்டிக்கொண்டது. அதனால் என் கால் இரண்டையும் எடுக்க வேண்டியதாயிற்று. அந்த விபத்தினால் மூன்று மாதங்கள் சுயநினைவே இல்லாமல் இருந்தேன். அந்த லாரி இரண்டு வாட்டி சரிந்தது. ஒரு தடவை சைடா சரிந்திருந்தா கொஞ்சம் ஆட்களை காப்பாத்திருக்கலாம். இரண்டாவது வாட்டி முழுசா குப்புற சாஞ்ச பிறகுதான் நிறைய பேர் அதுல இறந்துட்டாங்க. மாரி செல்வராஜின் அக்காவும் எங்க கூட வந்தாங்க அவங்களும் இறந்துட்டாங்க அப்படின்னு கூறியிருந்தார்.
இதைப் பார்த்த மாரி செல்வராஜ் இரண்டு கால்களையும் அந்த கோர விபத்தில இரண்டு கால்களையும் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். அந்த பெண்ணுக்கு போன் செய்து ஆறுதல் கூறிய மாரி செல்வராஜ் நான் இருக்கேன் அக்கா என்று கூறி உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்க நான் செய்ற அப்படின்னு சொல்லிட்டு ஆரம்ப கட்டமாக அந்த பெண்மணியின் வாழ்வாதாரத்துக்கு டிவிஎஸ் ஸ்கூட்டி ஒன்றை பரிசளித்துள்ளார் மாரி செல்வராஜ்.