NEWS
நீங்க Google யூஸ் பண்றீங்களா?.. மறந்தும் இந்த விஷயத்தை தேடாதீங்க.. மீறினால் சிறை தண்டனை தான்..!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தக் கூடியவர்கள் அனைவரும் கூகுள் பயனாளிகளாக இருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்கள் கூகுள் அடிப்படையாக வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு நவீன மயமாக்கல் இருந்தாலும் அதற்கென ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளது.
அரசின் வழிகாட்டுதலர்களின் படி குறிப்பிட்ட சில விஷயங்களை நாம் கூகுளில் தேட முடியாது. மேலும் குறிப்பிட்ட விஷயங்கள் மற்றும் புகைப்படங்கள் தேடவும் பதிவேற்றம் செய்யவும் முடியாது. இதனை மீறினால் விளைவுகள் மோசமாக இருக்கக்கூடும். அதன்படி கூகுளில் மறந்தும் தேட கூடாத விஷயங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
- போதைப்பொருள் தயாரிப்பு அல்லது வேறு ஏதாவது குற்றச்செயல்கள் தொடர்பான விஷயங்களை கூகுளில் தேடக்கூடாது. இது சட்ட விரோதமான செயல் என்பதால் சில நேரங்களில் சிறைக்கு கூட செல்ல நேரிடும்.
- கூகுளில் ஆபாச படங்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் ஆகியவற்றை தேடக்கூடாது. இது போக்சோ சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
- வெடிகுண்டு தயாரிக்கும் முறை பற்றி இணையத்தில் தேடக்கூடாது. பாதுகாப்பு நிறுவனங்கள் இன்டர்நெட் பயன்படுத்தியது போன்ற தேடல்களை கண்காணித்து வருகின்றன.
- மருத்துவரின் முறையான அனுமதி இல்லாமல் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக இணையத்தில் தேடக்கூடாது. இதனை அரசு தடை செய்துள்ளது.
- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் உண்மையான பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பொதுவெளியில் வெளியிடக்கூடாது. இதனை மீறி வெளியிடும் பயனர்களுக்கு தண்டனை அல்லது ஆலோசனை வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தை பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள.