#image_title
தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
40 களின் இறுதியில் சில புராணப் படங்களில் அவர் நடித்தார். அந்த படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் எம் ஜி ஆர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். மறுபக்கம் சிவாஜி கணேசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் வெளுத்து வாங்கும் சகலகலா வல்லவனாக வலம் வந்தார்.
இன்னொரு பக்கம் ஜெமினி கணேசன் காதல் படங்களாக நடித்து பெண்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்தார். அந்த காலகட்டத்தில் எம் ஜி ஆர் வெறும் ஆக்ஷன் ஹீரோதான், அவருக்கு காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்க வராது என்ற விமர்சனங்கள் பரவ ஆரம்பித்துள்ளன. இதை எம் ஜி ஆரும் கவனித்துள்ளார்.
அதனால் அப்போது அவர் நடித்து வந்த தேவர்பிலிம்ஸ் தயாரித்த வேட்டைக்காரன் படத்தில் கதாநாயகி சாவித்ரியோடு நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து அசத்தினாராம். இந்த காட்சிகளை எல்லாம் படமாக்கும்போதே படக்குழுவினர் எம் ஜி ஆர் இவ்ளோ அழகாக ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறாரே என வியந்து போய் கைதட்டி பாராட்டினார்களாம்.
காஸ்ட்ரைடிஸ் (Gastritis) என்பது வயிற்றின் உட்புறப் பாதுகாப்பச் சுவரில் ஏற்படும் அழற்சியாகும். இது ஆரம்பத்தில் வெறும் வயிற்று எரிச்சலாகத் தோன்றினாலும்,…
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஏழு வாரங்களாக நீடித்த போர் காரணமாக, உலகின் 20% கச்சா எண்ணெய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தீவிர அரசியல்…
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே…
தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில்…
'அட்சய' என்ற சொல்லுக்கு 'என்றென்றும் குறையாதது' என்று பொருள். ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிகவும் புண்ணிய நாளாகக் கருதப்படும்…