Categories: சினிமா

முடிவுக்கு வந்த 4 வருட திருமண வாழ்க்கை.. காதல் மனைவியுடனான விவாகரத்தை அறிவித்தார் ஹர்திக் பாண்டியா..!!

Spread the love

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் நட்சத்திர போட்டியாளர் ஆவார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவும் செர்பிய நடிகை மற்றும் மாடல் அழகியான நடாஷா ஸ்டோன்கோவிக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தது. அதற்கு ஏற்றவாறு நடாஷா தனது பெயருக்கு பின்னால் இருந்த பாண்டியன் என்ற பெயரை நீக்கினார். மேலும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவும் நடாஷாவும் சேர்ந்து தங்களது விவாகரத்து குறித்து அறிவித்துள்ளனர்.

T20 உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சகோதரர் குர்னால் பாண்டியா மற்றும் மகன் அகஸ்தியா உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்பு கொடுத்தனர். அங்கு நடாஷா இல்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, நான்கு வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு நானும் நடாஷாவும் சேர்ந்து முடிவெடுத்து பிரிந்து செல்கிறோம். ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு முயற்சிகள் எடுத்தோம். ஆனால் அது முடியவில்லை. இந்த முடிவுதான் எங்களுக்கு சிறந்தது என நம்புகிறோம்.

நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பரம் மரியாதை, தோழமை என்றும் அப்படியே இருக்கும். இது ஒரு கடினமான முடிவு. எங்கள் வாழ்க்கை மையத்தில் அகஸ்தியா தொடர்ந்து இருப்பார். அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். தொடர்ந்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். எங்களை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

admin

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

39 seconds ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

4 minutes ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

9 minutes ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

15 minutes ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

15 minutes ago