Categories: சினிமா

படுத்த படுக்கையாய் கிடந்த எம்.ஜி.ஆரைத் தேற்றிய அந்தப் பாடல்.. தமிழகத்தையே உருக வைத்த பிரார்த்தனை..

Spread the love

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறந்து பின் அரசியலில் நுழைந்து தீவிரமாகச் செயல்பட்ட காலம் அது. அப்போது எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக தமிழகமே கண்ணீர் விட்டது. மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஒவ்வொரு இல்லங்களிலும் அவருக்காக நடந்த பிரார்த்தனையின் போது ஒலிக்கப்பட்ட பாடல்தான் இறைவா உன் மாளிகையில் பாடல். இப்பாடலில் மனமுருகி இறைவனை வேண்டும் காட்சியில் பார்ப்பவர்களை உருக வைத்திருப்பார் சவுகார் ஜானகி. அப்போது சௌகார் ஜானகிக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

#image_title

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் இருந்த சமயம் அது. அப்போது எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு படத்தில் தானே சென்று வாய்ப்புக் கேட்டு நடித்தார் சௌகார் ஜானகி. பின் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவருக்காக ரசிகர்கள், தொண்டர்கள் அவர் பூரண நலம் பெற்றுத் திரும்ப பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். அச்சமயத்தில் ஒளி விளக்கு படத்தில் சௌகார் ஜானகி நடித்த ‘இறைவா உன் மாளிகையில்..‘ என்ற பாடலானது எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களின் பிரார்த்தனைக் குரலாய் ஒலித்தது.

#image_title

பின்னர் பூரண குணமடைந்து நாடு திரும்பிய எம்.ஜி.ஆர்., சௌகார் ஜானகியிடம் உன்னுடைய பாடல்தான் பட்டிதொட்டியெங்கும் நான் மருத்துவமனையில் இருந்ததாமே என்று கேள்விப்பட்டு நெகிழ்ந்து அவரை வாழ்த்தினார். அந்தப் பாடலை வாலி இயற்ற எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி கமல் சார் நீங்க மட்டும் இப்படி யோசிக்கிறீங்க..? டைட்டிலில் தரமான சம்பவம் செஞ்ச உலக நாயகன்..

சரியான பட வாய்ப்புகள் இல்லாத சௌகார் ஜானகிக்கு புதிய பறவை படம் இவருக்கு மீண்டும் கம்பேக் கொடுத்தது. தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட ஆரம்பித்தார். மேலும் பாமா விஜயம், எதிர்நீச்சல், தில்லு முல்லு போன்ற நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

#image_title

சௌகார் ஜானகி நடிக்க வருவதற்கு முன் வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணம் முடிந்து கையில் மூன்று மாதக் குழந்தையுடன் இருந்த போது குடும்பத்தில் வறுமை நிலவியது. தனது கணவரிடம் சினிமா ஆசை பற்றித் தெரிவிக்க அவரும் சம்மதம் கொடுக்க தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் வாய்ப்புக் கேட்டுள்ளார். அப்படி அவர் என்.டி.ராமராவ்-க்கு ஹீரோயினாக 1950-ல் சவுகார் படத்தில் நடித்தார். இந்தப் படமே அவருக்குத் திருப்புமுனையாக வர பின் இந்தப் படத்தின் பெயரே அவரது பெயருக்கு முன் ஒட்டிக் கொண்டது.

admin

Recent Posts

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாதா? வெளியானது அதிர்ச்சித் தகவல்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…

55 seconds ago

BREAKING: செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்…. தவெக ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

9 minutes ago

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

14 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

31 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

50 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

1 மணத்தியாலம் ago