Mahanathi

எப்படி கமல் சார் நீங்க மட்டும் இப்படி யோசிக்கிறீங்க..? டைட்டிலில் தரமான சம்பவம் செஞ்ச உலக நாயகன்..

By admin on தை 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும், உலக நாயகன் கமல்ஹாசனின் தரமான படைப்பாகவும் இன்று வரை கொண்டாடப்படும் படம் தான் மகாநதி. ஒரு தந்தையாக கமல்ஹாசன் இதில் அவ்வளவு தத்ரூபமாக தனது நடிப்பைக் கொட்டியிருப்பார். படத்தின் வரும் அனைத்துக் காட்சிகளும் கண்களைக் குளமாக்கும். 1994-ல் கமலின் நண்பரான சந்தான பாரதி இயக்கிய இப்படம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் படைப்பு. ஒரு தந்தை தனது மகளை எந்தக் கோலத்தில் பார்க்கக் கூடாதோ அந்தக் கோலத்தில் மகளைப் பார்த்து உருகி அழும் காட்சியில் உலக நாயகன் நிஜ தந்தைகளையே மிஞ்சி விடுவார்.

#image_title

இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் இப்படத்திற்கு பெரும் உயிர்த் துடிப்பாக இருந்தது. மேலும் ஜெயில் சீன்களும் நம்மை உச் கொட்ட வைக்கும். இதில் வார்டனாக வரும் மகாநதி ஷங்கர் அப்படியே நடிப்பை உள்வாங்கியிருப்பார். பார்ப்பவர்களை எரிச்சலடையச் செய்வது இவரின் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

   
   

இப்படிப்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட மகாநதி முக்கியமான ஒரு சிறப்பைக் கொண்டுள்ளது. அதாவது அப்படத்தின் டைட்டில்தான். இந்த படத்தோட முக்கியமான கேரக்டர் பெயர்களைப் பார்த்தால் விளங்கும். கமல் – கிருஷ்ணசாமி.. சுகன்யா – யமுனா.. கமல் மாமியாராக நடித்தவர் – சரஸ்வதி.. கமல் மகள் ஷோபனா – காவேரி.. கமல் மகன் – பரணி.. இறுதியாக கிருஷ்ணா.. யமுனா.. சரஸ்வதி.. காவேரி.. பரணி (தாமிரபரணி).. இப்படி நதிகள் கலந்து சங்கமித்த படம் தான் மகா நதி.

 

#image_title

கோட் பட ஷூட்டிங்கில் கடுப்பான தளபதி, இப்படி பண்ணாதீங்க – வெங்கட்பிரபுவிடம் கோபமாக பேசிய விஜய்

எதிலும் வித்தியாசம் காட்டி சினிமாவிற்கு புது முயற்சிகளை அறிமுகப்படுத்தும் உலக நாயகன் பட டைட்டிலில் கூட தனது முத்திரையைப் பதித்திருப்பார். அதனால்தான் அவரை இன்றளவும் தமிழ்சினிமாவின் காட்பாதர் என்கிறோம். இதற்கு சாட்சியே இன்னும் உலக அரங்கில் விக்ரம்,  இந்தியன் 2, தக் லைப், கல்கி எனப் பல புதுமையான படங்களை இன்னும் தந்து கொண்டிருக்கிறார்.