தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும். 1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன்.
மதுரை வீரனின் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தை யோகானந்த் இயக்கியிருந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆர் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு இறந்து விடுவார். மதுரை வீரன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் மதுரை வீரன் இறந்து சாமியாகி விடுவார் என்பது தான் இப்ப படத்தின் கதை. ஆனால் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் தன்னால் நடிக்க முடியாது என்று எம்ஜிஆர் கூறியுள்ளார்.
ஏனென்றால் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்த எம்ஜிஆர்,இது தன்னுடைய கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்பதால் கிளைமாக்ஸ் காட்சியில் என்னால் நடிக்க முடியாது என்று இயக்குனரிடம் வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு ஐடியாவும் கொடுத்துள்ளார். அதாவது தன்னால் நடிக்க முடியாது என்றாலும் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு பிடித்துள்ளது, அதனால் என்னால்தான் நடிக்க முடியாது எனக்கு பதிலாக டூப் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார். அப்படிதான் அப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியும் எடுக்கப்பட்டுள்ளது.