இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர். இவர் மாடல் அழகியாக இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்சல் அழகி போட்டியில் இரண்டாம் பட்டத்தை பெற்றார்.
அதன் மூலமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் இவர் கதாநாயகி அவ நடித்த திரைத்துறையில் அறிமுகமானார்.
அதன் பிறகு இவருடைய முதல் திரைப்படம் வெற்றி அடைந்ததால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவருக்கு அங்கு நம்பர் ஒன் நடிகையாகும் வாய்ப்பு கூடிய விரைவில் கிடைத்து விட்டது.
அதிக சம்பளமும் அங்கு வாங்கி வந்த இவர் மீண்டும் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் பெரிய அளவு வெற்றி பெறாத நிலையில் மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பினார். தற்போது அவர் விஜயுடன் இணைந்து தளபதி 69 திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது அவர் நேற்று தனது பிறந்த நாளை காட்டுக்குள் கிளாமராக கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.