“உறவுமுறை தடை…” காதலுக்கு எதிர்ப்பு… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் ஜோடி… காதலர்கள் எடுத்த விபரீத முடிவு… பதறிய குடும்பம்… லக்னோவை உலுக்கிய சோகம்…

By Visaka on ஆடி 27, 2026

Spread the love

லக்னோவின் தெலிபாக் பகுதியில் உள்ள பி.ஜி.ஐ. நியூ பல்தேவ் விஹார் காலனியில், திருமணம் செய்யக் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளாததால் மனமுடைந்த இளம் ஜோடி ஒன்று சனிக்கிழமை நள்ளிரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளது. அனிகேத் (21) மற்றும் அஞ்சலி (18) இருவரும் கடந்த சில காலமாக விரும்பிய நிலையில், ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ளத் தீவிரமாக முடிவு செய்திருந்தனர். ஆனால், அஞ்சலி முறையில் அனிகேத்திற்கு அத்தை மகள் என்பதால், உறவுமுறை காரணமாக இரு வீட்டார் தரப்பிலும் இந்தத் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/ImranTG1/status/2081407609375211924/photo/1

   

குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பால் மன உலைச்சலுக்கு ஆளான அந்த ஜோடி, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் ஜோடியின் இந்த திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.