சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நள்ளிரவில் நடந்த ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு போதையில் இருந்த இளம்பெண் ஒருவர், நடுரோட்டில் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியபடி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், சாலையில் நின்றுகொண்டிருந்த காரை எட்டி உதைத்து அவர் ரகளையில் ஈடுபட்டார். பொது இடத்தில் அந்த பெண் வரம்பு மீறி நடந்துகொண்ட இந்த செயல், அந்த வழியாக சென்றவர்களை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்தது.
இளம்பெண்ணின் இந்த அத்துமீறலைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், உடனடியாக அவருக்குத் தகுந்த பாடம் புகட்டினர். அந்தப் பெண்ணை சூழ்ந்துகொண்ட மக்கள், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து கடுமையாகத் தாக்கினர். இதனால் அந்த இடமே சிறிது நேரம் போர்க்களம் போல காட்சியளித்தது. நடுரோட்டில் நடந்த இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. இது இன்றைய இளைய தலைமுறையினரின் சீரழிவைக் காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
