“நேரடி அரசியலுக்கு நோ”… ரஜினியின் புதிய அரசியல் என்ட்ரி?… காத்திருக்கும் கவர்னர் பதவி…. பரபரப்பு தகவல்….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக பரவிவரும் தகவல்கள், தமிழக அரசியலிலும் ரசிகர் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது தற்போதைய உடல்நிலையை கருத்தில் கொண்டும், நேரடி அரசியலின் தீவிர அழுத்தங்களைத் தவிர்க்கும் பொருட்டும் இப்பதவியை ஏற்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அளித்த பேட்டி இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இருப்பினும், இதுவரையில் ரஜினிகாந்த் தரப்பிலிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை. தீவிர அரசியலில் களமிறங்கும் முடிவை ஏற்கனவே கைவிட்டுவிட்ட ரஜினிகாந்த், ஆளுநர் போன்ற அரசியலமைப்பு சார்ந்த கெளரவப் பொறுப்பை ஏற்பாரா அல்லது வழக்கம் போல திரைத்துறையிலேயே கவனம் செலுத்துவாரா என்பது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் போதுதான் முழுமையாகத் தெரியவரும்.