காலையிலேயே EPS-க்கு ஷாக்..! அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.. ஸ்டாலினுக்கு ஹேப்பி…!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love

சட்டப்பேரவைத் தேர்தல் களம் நெருங்குவதை ஒட்டி, தமிழகத்தில் கட்சித் தாவல்கள் மற்றும் தங்களது பலத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்.

இந்த இணைப்பு விழா அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தனர். புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய அமைச்சர்கள், தேர்தல் காலம் நெருங்குவதால் இப்போதிலிருந்தே கட்சிப் பணிகளையும், களப்பணிகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினர்.