Categories: சினிமா

புளியங்கொம்பை தான் புடிச்சிருக்காங்க.. நடிகை மேகா ஆகாஷின் வருங்கால கணவர் இந்த பிரபலத்தின் மகன் தானா..

Spread the love

நடிகை மேகா ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படம் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்ததாக வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இவர் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது தெலுங்கில் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சாய் விஷ்ணுவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக புகைப்படங்களுடன் தகவலை பகிர்ந்து இருந்தார் மேகா ஆகாஷ். இவர்கள் இருவரும் பேசினால் போதும் அன்பே என்ற குறும்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் தன் திருமணம் குறித்து மனம் திறந்து உள்ள மேகா, சாய் விஷ்ணுவை கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு தெரியும் என்றும் தன்னுடைய நெருங்கிய தோழியின் சகோதரரான அவரை தான் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஃபிலிம் மேக்கிங் படித்துள்ளார் சாய் விஷ்ணு.

இவர் பா ரஞ்சித்தின் காலா மற்றும் கபாலி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவருக்கு எப்போதுமே சினிமா மீதுதான் ஆர்வம் அதிகம் என்ற போதிலும் தற்போது பிசினஸை கவனித்து வருவதாக மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார். தங்களின் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் உள்ளிட்ட அனைத்தையும் முன்னதாக சரியான திட்டமிடலுடன் எதிர் கொண்டதாக கூறியுள்ளார்.

சாய் விஷ்ணு முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு ஜோடியின் திருமணம் வருகின்ற செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

நொடிப் பொழுதில் மிரட்டிய மரணம்…! மும்பை ரயில் நிலையத்தை உலுக்கிய பயங்கரம்… பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!!

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…

1 minute ago

“மரணம் கூட நிம்மதி இல்லாமயா…” காணக் சகிக்காத அவலம்… அமைச்சரின் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இல்லையா?… அரசை உலுக்கும் பழங்குடியினப் பெண்ணின் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…

2 minutes ago

“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்”… விஜயபாஸ்கரை சுற்றும் ‘சாலை விபத்து’ மர்மம்… காவலரைக் காப்பாற்றிய மாஜி அமைச்சர்… நடுரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்…!

சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…

13 minutes ago

“அதிமுகவில் டிடிவி தினகரன்…?” – ஓப்பனாக கேட்ட நிர்வாகி… எடப்பாடி கொடுத்த ஷாக்கிங் பதில்…! டெல்டாவில் பெரும் அதிர்வு…!!

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

13 minutes ago

“அடேங்கப்பா… 31 கி.மீ கடக்க 2.5 மணி நேரமா…?!” – பெங்களூரு டிராபிக்கில் சிக்கித் தவித்த இன்போசிஸ் இணை நிறுவனர்…! இணையத்தை உலுக்கும் பதிவு…!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…

21 minutes ago

சிங்கள் லைப் தான் கெத்து… “பெத்தெடுத்தா மட்டும் போதாது…” கல்யாணம், குழந்தை எல்லாம் நோ… ஓப்பனாக பேசிய நடிகை பார்வதி… இணையத்தை உலுக்கும் புதிய சர்ச்சை…!

சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…

25 minutes ago