நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபத்திற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலிலும் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்தார்.
இந்த நிலையில் நடிகை மீரா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கார்த்திகை தீபம் சீரியல் நடிகர் கார்த்திக் பற்றி பேசினார். அவர் கூறியதாவது கார்த்திக் ராஜ் என்னைவிட இரண்டு மூன்று வயது சின்ன பையன். செம்பருத்தி சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோதே அவர் பற்றிய விமர்சனங்கள் வெளியானது. நானும் அவரை பற்றி தவறாகத்தான் நினைத்தேன். ஆனால் அவருடன் சீரியலில் நடித்த பிறகுதான் அவரைப் பற்றிய உண்மை எனக்கு தெரியவந்தது.
அவர் சினிமாவில் உள்ள பல விஷயங்களை நமக்காக சொல்லித் தருவார். அவருக்கு அம்மாவாக நடிப்பதால் நிஜத்திலும் அம்மாவிடம் பழகுவதை போலத்தான் நடந்து கொள்வார். நிஜத்தில் பழகும் போது தான் அவரைப்பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முன்பு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக்கிற்கு அம்மாவாக நடித்தேன்.
அவர் என்னைவிட வயதில் மூத்தவர். முன்னதாக நாயகி சீரியலிலும் அம்மாவாக நடித்தேன். அந்த ஹீரோவுக்கும் எனக்கும் ஒரே வயது. என்னை விட வயது மூத்தவர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு பெரிய சிரமம் ஒன்றுமில்லை. எப்போதும் போல தான் இருக்கிறது. அனைவரும் எனக்கு பல விஷயங்களை சொல்லி தருகிறார்கள். நாங்கள் ஒரு குடும்பமாக தான் பழகுகிறோம் என மீரா கிருஷ்ணன் கூறியுள்ளார்.