சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு என்ன நடக்கப்போகிறது என்பதை தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.
தமிழ் சினிமாவில் சீரியலுக்குப் பெரும்பாலும் பஞ்சமே இருக்காது . தமிழ் சினிமாவில் சன் டிவி, விஜய் டிவி ,ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் இடையே வரவேற்பை பெற்று வருகின்றது. சீரியலுக்கு பேர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான். அதைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் இருப்பது விஜய் டிவி. இந்த சேனலிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
விஜய் டிவியில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை முத்து மற்றும் மீனாவிற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் மீனாவின் நகையை எல்லாம் வாங்கி விற்றுவிட்டு அதற்கு பதிலாக போலி நகையை எடுத்து வந்து கொடுத்திருக்கின்றார். பாட்டியின் பிறந்தநாளுக்கு முத்து செயின் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அப்போது இது கவரிங் நகை என்று கூறி விடுகிறார்கள். இருப்பினும் பாட்டியின் பிறந்தநாள் முடியும் வரை எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று மீனா சொன்னதால் முத்து தற்போது வரை மௌனம் காத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் பாட்டி தனக்கு மனம் கவரும் பரிசு கொடுப்பவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்று கூறியதால் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு பரிசை ரெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.
முத்து மீனாவை தவிர மற்ற அனைவரும் பரிசை கொடுத்து விட்டார்கள். இதைத்தொடர்ந்து மனோஜ் அந்த பரிசு என்ன என்று பாட்டியிடம் கேட்க முத்து வரட்டும் அதுக்கப்புறம் தான் சொல்லுவேன் என்று கூறிவிடுகிறார். அவன் குடித்துவிட்டு காலையில் தான் வருவான் என்று திமிராக கூற முத்து என்ட்ரி கொடுக்கின்றார். முத்து என்ன பரிசு கொடுக்கப் போகிறார். தங்க நகைகள் எப்படி கவரிங் நகைகள் மாறியது என்ற உண்மையை அவர் கண்டுபிடித்து விட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
View this post on Instagram