தளபதி விஜயுடன் நடிக்க பயந்த பிரபல நடிகை.. ஒரு சுவாரஸ்ய தகவல் உங்களுக்காக..!!

By admin on புரட்டாதி 3, 2024

Spread the love

பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. டிகிரேட்டர்ஸ் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்ப மூலம் கோட் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

   

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட் திரைப்படத்திலிருந்து மட்ட பாடல் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை மீனாட்சி சௌத்ரி முதலில் அவருடன் நடிக்க பயந்தாராம். அது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே கோட் திரைப்படத்தில் நடிப்பதால் வளர்ந்து வரும் கதாநாயகியான மீனாட்சி சவுத்திரிக்கு பதட்டமாகவே இருந்துள்ளது.

அதன் பிறகு தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார். இந்த தகவலை பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மீனாட்சி சுந்தரி கடந்த 2021-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தெலுங்கு திரைப்படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.