CINEMA
ஹாஸ்பிடலில் சீரியஸாக இருக்கும் ரோகிணியின் அம்மா… நிற்கதியாய் கிரிஷ்… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் விஜயா போட்ட மாஸ்டர் பிளானை மீனாவும் ஸ்ருதியும் அசால்டாக தட்டி விடுகின்றனர். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காண்போம்.
இன்றைய எபிசோடில் கீழே காரை துடைத்து கொண்டிருக்கும் முத்துவிடம் வந்த அண்ணாமலை ஏன்டா இப்படி சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்கிறார். அதற்கு முத்து நடந்த ஃபிளாஷ்பாக் எல்லாவற்றையும் கூறுகிறான். அம்மா மீனாவும் சுருதியும் நெருக்கமா இருக்குறத புடிக்காம சுருதியோட அம்மாவை கூப்பிட்டு ஏதோ சொல்லி ஏத்திவிட்டு இருக்காங்க. ஸ்ருதி அம்மா மீனாவ வந்து திட்டிட்டாங்க. நானும் கோபப்பட்டு சுருதியை திட்டலாம் தான் ஃபர்ஸ்ட் கோவத்துல தான் கிளம்பினேன்.
மீனாதான் என்ன சமாதானப்படுத்தி இந்த மாதிரி ஒரு பிளான் போட்டு கொடுத்தா. அத்தை இந்த மாதிரி பண்ணாங்க அப்படினா அதுக்கு சுதி என்ன பண்ணுவாங்க. நம்ம அத்தை வழியில் போய் அவங்கள சரி கட்டிடுவோம் அப்படின்னு சொல்லி இதெல்லாம் நாங்க பிளான் போட்டு பண்ணிட்டு இருந்தோம். உண்மையா நாங்க சண்டை போடவே இல்ல உள்ள பிஸ்கட்டு சாப்பிட்டு சும்மா தான் கத்திக்கிட்டு இருந்தோம் அப்படின்னு சொல்கிறான் முத்து. உடனே அண்ணாமலை அட போங்கடா என்னமோ பண்றீங்க புத்திசாலித்தனமா பண்றேன்னு சொல்லிட்டு புதுசா எந்த பிரச்சனையும் விலைக்கு வாங்காம இருந்தா சரி அப்படின்னு சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
பின்னர் சுருதி அவங்க அம்மாவிற்கு ஃபோன் செய்து நீ பண்றது ஒன்னும் நல்லா இல்லமா. இந்த வீட்ல எனக்கும் மீனாக்கும் எந்த பிரச்சினையும் இல்ல. பிரச்சனை பண்றது ஃபுல்லா ஆன்ட்டிதான். அவங்க என்ன பண்றாங்க ஏது பண்றாங்கன்னு தெரியாம நீ எதுக்கு அவங்க சொன்னாங்கன்னு திட்டுற. இனிமேல் மீனா கிட்ட நீ எதுவும் பேசக்கூடாது இதோட விட்று அப்படின்னு சொல்லி ஸ்ருதி அவங்க அம்மாவே திட்டி விட்டு போனை கட் செய்து விடுகிறாள்.
பின்னர் மறுபக்கம் ரோகிணியின் அம்மா சீரியஸாக ஹாஸ்பிடலில் சேர்ந்திருக்கிறார். அங்கு வந்த ரோகினி என்னாச்சு என்று கேட்கிறார். வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்தாங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அதான் ஆஸ்பத்திரில வந்து சேர்த்தோம் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க அக்கம் பக்கத்தினர். உடனே அவங்க அம்மாவை போய் பார்க்கிறாள் ரோகிணி. அங்கு கிரிஷ் பாவம் போல நின்று கொண்டிருக்கிறான். ரோகிணி வந்ததும் அம்மா பாட்டிய பாருங்க என்று சொல்கிறான். பின்னர் அங்க வந்து டாக்டர் இடம் ரோகிணி என்னாச்சு டாக்டர் எங்க அம்மாவுக்கு என்று கேட்கிறாள். அவங்களுக்கு ஏதோ மைண்ட்ல ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கு பிரைன்ல ஏதோ பிரச்சனையா அப்படிங்கறத செக் பண்ணி பாக்கணும் அப்படின்னு சொல்லிட்டு போய்டறாங்க.
உடனே ரோகிணி எதை தான் நினைச்சு நீ இப்படி கவலைப்பட்டுக்கிட்டு இருக்க. இப்படி நீ உடம்பை கெடுத்துக்குற நீ இல்லன்னா நாங்க என்ன செய்வோம் அப்படின்னு கேட்கிறாள். உடனே ரோகிணியின் அம்மா எனக்கு உன்ன பத்தி தான் கவலை ரோகினி. நீ அந்த வீட்டிலேயே ஒரு பொய்யை சொல்லிட்டு வாழ்ந்துட்டு இருக்க உன் பொய் எல்லாம் ஒரு நாள் தெரிஞ்சா உன் வாழ்க்கை என்னாகுமோ க்ரிஷ் வாழ்க்கை என்னாகும்னு எனக்கு தெரியல. அதை நினைச்சு தான் எனக்கு கவலை என்று சொல்லுகிறாள். உடனே நீ அதெல்லாம் நினைச்சு கவலைப்படாதம்மா நான் எல்லாம் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்லுகிறாள். பின்னர் ரோகினி மனசுக்குள் வருத்தப்பட்டு எப்படி இந்த நிலைமையை சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே இருக்கிறாள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.