CINEMA
“டேய் உனக்கு மகன் பிறந்திருக்கான்”.. யுவன் பிறந்த சந்தோஷத்தில் உருவான பாட்டு.. இளையராஜா பகிர்ந்த சீக்ரெட்..!
மேஸ்ட்ரோ மற்றும் இசைஞானி என இசையுலகமே இளையராஜாவை கொண்டாடி வந்த நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இசையுலகின் நாயகனாக 27 ஆண்டுகளை சமீபத்தில் நிறைவு செய்ததை கொண்டாடினர். 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இளையராஜாவுக்கும் ஜீவா அம்மாவுக்கும் மகனாக பிறந்தவர் தான் யுவன். 1996 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரவிந்தன் படத்தில் தொடங்கி தற்போது வரை 170-க்கும் மேற்பட்ட படங்களில் இவரது இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இசையமைத்துள்ள இவர் பாடல்கள் பெரும்பாலானவை 2K ஆரம்ப கட்டத்தில் இளைஞர்களின் மனதை ரிங்காரமாய் ஒலித்த பாடல்களாக அமைந்தன. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானபோது அவருடைய வயது 16. தற்போது முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா பிறந்த போது தான் எங்கே என்ன செய்து கொண்டிருந்தேன் என்ற சுவாரஸ்ய தகவலை இளையராஜா ஒரு வீடியோவில் பகிர்ந்து உள்ளார். அதில், ரஜினியின் ஜானி படத்தின் செனோரிட்டா பாடலுக்கு ஆழியார் அணையில் டியூன் போட்டுக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர் கே ஆர் ஜி தான் டேய் உனக்கு மகன் பிறந்திருக்கான்னு சொன்னாரு. மனைவி கர்ப்பமாக இருந்த போது கூட நான் கூட இல்லாமல் சினிமாவுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். அப்படிதான் யுவன் சங்கர் ராஜா பிறந்தார் என்ற சீக்ரெட் ஸ்டோரியை இளையராஜா பகிர்ந்துள்ளார்.