பிரபல இயக்குனரான வின்சென்ட் செல்வா பிரியமுடன் என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக கௌசல்யா நடித்தார். இந்த படம் 1998-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தெலுங்கு, கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த படம் இதுதான்.
பின்னர் விஜயை வைத்து கடந்த 2002-ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா யூத் படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் வின்சென்ட் செல்வா அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலில் பிரியமுடன் பட கதையை மீனாவிடம் தான் சொன்னேன். அவர்தான் அந்த படத்தில் நடிக்க வேண்டியது. மீனாவுக்கும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என ரொம்ப ஆசை. அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டது.
ஆனால் ஒரு சில காரணங்களால் மீனாவால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் கௌசல்யா பிரியமுடன் படத்தில் நடித்தார் என கூறியுள்ளார். பிரபல நடிகரான விஜயுடன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் இணைந்து நடித்துள்ளனர். அசின், தேவயானி, திரிஷா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆனால் விஜயுடன் மீனா இணைந்து நடிக்கவே இல்லை. பிரபல நடிகையான மீனா சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த், அஜித், கமல் உள்ளிட்டோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மீனா சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் விஜய் நடிக்கும் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவருடன் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் ஷாஜகான் படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.