“என் பொன்னு சூப்பர் ஸ்டார் ஜோடி… இவர் கூட டான்ஸ் ஆடணுமா…” அஜித்தை அவமானப்படுத்திய நடிகையின் அம்மா!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

ஆசை திரைப்படத்துக்கு முன்புவரை அஜித், சினிமாவில் தனக்கு நிலையான கேரியர் இருக்கும் என்றே நினைக்கவில்லையாம். தன்னுடைய மோட்டார் பைக் ரேஸ் பந்தயங்களுக்கான செலவினங்களுக்காகவே படங்களில் நடித்து வந்துள்ளார். அதனால் பல படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் ஆசை படத்தின் வெற்றி அவருக்கு சினிமாவில் மேல் ஒரு பிடிப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

அதன் பிறகு தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவர் முன்னணிக்கு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகின. அப்போது அவர் பல அவமானங்களை சந்தித்துள்ளார். அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு எஜமான், முத்து ஆகிய படங்களிலும் கமல்ஹாசனோடு அவ்வை ஷண்முகி படத்திலும் நடித்து நம்பர் 1 நடிகையாக இருந்தார்.

அப்போது சினிமா சம்மந்தமாக நடந்த ஒரு கலைவிழாவில் அஜித்துடன் இணைந்து மீனா நடனமாட வேண்டும் என முடிவு செய்துள்ளனர் விழா ஏற்பாட்டாளர்கள். ஆனால் அப்போது மீனாவின் அம்மா “என் பொண்ணு ரஜினிக்கு ஜோடியா நடிச்சுட்டு இருக்கா. அவளப் போய் அஜித் கூட ஆட சொல்றீங்க” எனக் கோபத்தை வெளிப்படுத்தி அந்த நடனத்தைக் கேன்சல் செய்துள்ளார்.

ஆனால் சில ஆண்டுகளில் மீனாவின் மார்க்கெட் சரிய, அஜித்தின் மார்க்கெட் வளர ஆரம்பித்துள்ளது. அப்போது ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் மீனா நடிக்கிறார் என்று தெரிந்த போதும் அஜித் ஒன்றும் சொல்லாமல் அவருடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.