சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்துவின் காரை ஏற்கனவே பழிவாங்க காத்திருக்கும் டிராபிக் போலீஸ் எடுத்து சென்று விடுகிறார். முத்து போலீஸ் ஸ்டேஷனில் போய் காரை கேட்டு கொண்டிருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் முத்து போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் இடம் என்னுடைய கார் திரும்ப வேண்டும் நான் வந்து நல்லது செய்வதற்காக தான் அப்படி போனேன் அப்படின்னாலும் Fine தானே போடணும் எதுக்கு கார தூக்கிட்டு வரீங்க என்று கேட்கிறார். உடனே அந்த கான்ஸ்டபிள் நீ எப்ப பாத்தாலும் நல்லது செய்றனு சொல்ற சரி அதுக்காக ரூல்ஸ் ஃபாலோ பண்ணல அப்படினா இப்படி தானப்பா செய்வாங்க என்று கூறுகிறார்.
அடுத்ததாக அந்த இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு மீனாதான் வழக்கமாக பூ கொடுத்து வருகிறார். அங்கு சென்ற மீனா இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் சென்று உதவி கேட்கிறார். ஏதோ நல்லது செய்யணும் எண்ணத்தில் இப்படி பண்ணிட்டாரு. கார்ல சவாரி வந்தவரோட அவரோட அப்பா இறந்துட்டாங்க காரியம் பண்ணதுக்கு லேட்டாயிடும் டிரைன்ல ஏத்தி விடணும்னு தான் அப்படி பண்ணிட்டார் என்று கூறுகிறார். சரி உதவி செய்கிறேன் என்று அந்த இன்ஸ்பெக்டரின் மனைவியும் கூறுகிறார்.
அடுத்ததாக வீட்டில் ஏற்கனவே ரோகினிக்கு பேய் பிடித்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த மனோஜ் விஜயா மூன்று நாளைக்கு சாமியார் பிரம்பு அடி கொடுக்கச் சொன்னார் என்று இரண்டாவது நாளாக ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரை அடித்து விடுகின்றனர். ரோகினி வலியால் துடிக்கிறார். மனோஜ் மன்னிச்சிடு ரோகினி பேய் ஓட்ட தான் இப்படி பண்ணேன் என்று காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இன்ஸ்பெக்டர் முத்துவை கண்டித்து காரை கொடுத்து விடுங்க என்று சொல்கிறார். உடனே இந்த டிராபிக் போலீஸ் அழைத்து ரூல்ஸ் பிரேக் பண்ணா பைன் போடுங்க எதுக்கு பொழப்பு நடத்துற காரை தூக்கிட்டு வரீங்க என்று சொல்கிறார். முத்து சாரி சார் என்று சொல்லும்போது என்ன பண்ற தப்பு எல்லாம் பண்ணிட்டு உன் Wife ஐ என் வீட்டுக்கு அனுப்பி சமாதானம் பேசுறியா என்று கூறுகிறார். அடுத்ததாக வெளியே வந்து முத்து மீனாவுக்கு போன் செய்து நன்றி கூறுகிறார். பிறகு வீட்டில் சுருதியும் ரவியும் முதல் வருட வெட்டிங் ஆனிவர்சரி செலபிரேட் பண்ணுவதற்கு பத்திரிகை அடித்து எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். விஜயா தான் டான்ஸ் ஆட வேண்டும், மீனா பூ டெகரேஷன் பண்ணனும் என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
