எதிர்நீச்சல் முதல் பராசக்தி வரை… பழைய படத்தின் டைட்டிலை காப்பியடித்திருக்கும் சிவகார்த்திகேயன் படங்கள் இத்தனையா..?

By Soundarya on தை 30, 2025

Spread the love

சிவகார்த்தியேன் நடித்துள்ள எதிர்நீச்சல் முதல் பராசக்தி வரை பல படங்கள் பழைய படங்களின் தலைப்பு தான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பார்க்கலாம்.

   

1987ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான  திரைப்படம் வேலைக்காரன். இது நகைச்சுவைத் திரைப்படமாகும். ரஜினிகாந்த், சரத் பாபு, அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் ஒரு சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும். இதே தலைப்பில் தான் மோகன் ராஜாவால் எழுதி இயக்கிப்பட்ட 2017இல் வெளிவந்த அதிரடித் திரைப்படம் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகும். இந்தப் படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், பகத் பாசில், சினேகா மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

   

 

பராசக்தி படம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.மு. கருணாநிதி வசனம் எழுத, கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.  பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. எ. பெருமாள் அவர்கள். இப்படம் இதே பெயரிலான பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. பராசக்தி இரண்டாம் உலகப் போரின்போது ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அவலங்களை விவரிக்கிறது. இதே தலைப்பில் தான் தற்போது சிவகார்த்திகேயன், ஸ்ரீலிலா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.


1968 ஆம் ஆண்டு வெளியான  தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படம் எதிர்நீச்சல். இது கே. பாலசந்தர் எழுதி இயக்கியது. இந்த படத்தில் நாகேஷ், முத்துராமன், சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், எம். ஆர். ஆர். வாசு, சௌகார் ஜானகி மற்றும் ஜெயந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதே தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. இதில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்திருப்பார்.

காக்கி சட்டை  1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜசேகரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. இதே தலைப்பில் 2015 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியா திரைப்படமாகும். நடிகர் தனுஷ் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

அமரன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. இராஜேசுவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், பானுப்ரியா, மற்றும் பலர் நடித்திருந்தனர். பிறைசூடன், வைரமுத்து ஆகியோரின் பாடல்களுக்கு ஆதித்யன் இசையமைத்திருந்தார். இதே தலைப்பில் கடந்த வருடம் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் அமரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

மாவீரன் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அம்பிகா, மக்கள்கலைஞர் ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். இதே தலைப்பில் 2003 ஆம் வருடம் மாவீரன் படம் வெளியானது. இந்த திரைப்படத்தை மடோன் அஷ்வின் இயக்கிஇருந்தார். . இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சரிதா, மிஷ்கின், மோனிஷா பிளெஸ்ஸி, யோகி பாபு மற்றும் சுனில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.