நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு வருகின்ற பிப்ரவரி ஆறாம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது. அஜித் ரசிகர்களால் பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் இந்த படமானது பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருபதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் கூட படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ஒரு கோடிக்கு மேல் விடாமுயற்சி படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கில் இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
