BREAKING: இரவோடு இரவாக திமுகவிலிருந்து விலகிய முக்கிய புள்ளி.. செம அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

By Soundarya on வைகாசி 24, 2026

Spread the love

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலாளரான மீனா ஜெயக்குமார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கோவையைச் சேர்ந்த இவர், கடந்த தேர்தல்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த விலகல் முடிவை அவர் தனது அதிகாரப்பூர்வ ‘X’ (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாகப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் இவர் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸை நேரில் சந்தித்துப் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருந்தது. அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தற்போது அவர் திமுகவிலிருந்து விலகியிருப்பது, அவர் விரைவில் அதிமுக அல்லது மாற்று அரசியல் கட்சியில் இணையக்கூடும் என்ற பலத்த எதிர்பார்ப்பையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.