தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கோவை மணி (69) அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் கோவை மணி அவர்கள் தமிழ் சினிமாவில் ‘பாட்டாளி மகன்’, ‘விக்னேஷ்வர்’, ‘மிஸ்டர் மகாராணி’, மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மாசி’ உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், இவர் நடிகர் அர்ஜுனின் மேலாளராகவும் (Manager) நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்
