திமுக கூட்டணியில் இருந்து விலகும் மதிமுக..? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

Spread the love

திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக தங்களை மிகக் குறைந்த தொகுதிகளில், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிருப்தி வெளியிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, திருச்சி வந்த தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை துரை வைகோ நேரில் வரவேற்றதும், அவருடனான அடுத்தடுத்த சந்திப்புகளும் மதிமுக தவெக நோக்கி நகர்கிறதோ என்ற அரசியல் யூகங்களை வலுப்படுத்தியுள்ளன.

இருப்பினும், தற்போதைய சூழலில் மதிமுக இன்னும் திமுக கூட்டணியில்தான் நீடித்து வருகிறது என்று வைகோ மற்றும் துரை வைகோ ஆகிய இருவருமே தெளிவுபடுத்தியுள்ளனர். தவெகவின் புதிய ஆட்சியை விமர்சிக்க இது உகந்த நேரமல்ல என்றும், தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக சின்னத்தில் வென்றதால் உடனடியாக அரசுக்கு ஆதரவு அளிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணிக் கொள்கை குறித்து வரும் ஜூன் 27-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே அதிகாரப்பூர்வ இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

Swetha

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

2 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

2 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

2 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

2 மணத்தியாலங்கள் ago