நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் sbi வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கியில் கோடிகணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வங்கி கிளைகளுக்கு வருகை தருகிறார்கள். இதில் பல வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது .டெபாசிட், பணத்தை திரும்ப பெறுதல், நிலையான வைப்புதொகை, கடன், காசோலை போன்றவை அடங்கும். மேலும் காலம் வரும்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் வடிவத்தில் சிறந்த சேவைகளை எஸ்பிஐ வங்கி முன்னிலையில் உள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே பல செயலிகள் கொண்டு வரப்பட்டது.
அந்த வகையில் தற்போது டிஜிட்டல் பணம் செலுத்துதல் தொடர்பாக ஒரு வகையான சேவை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது OnlineSBI, YONO Lite ஆகியவற்றில் நவ.30 முதல் mCASH சேவையை நிறுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. ஒருவரின் செல்போன் எண் அல்லது இ-மெயில் முகவரியை கொண்டு அவருக்கு பணம் செலுத்தும் வசதி தான் MCASH ஆகும். ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இனி பணம் அனுப்ப முடியும். இதற்கு மாற்றாக UPI(BHIM SBI Pay), IMPS, NEFT, RTGS உள்ளிட்ட மற்ற பரிவர்த்தனை முறைகளை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
