நாமக்கல்லில் வரலாறு காணாத அளவிற்கு முட்டையின் கொள்முதல் விலை 5.95 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் இதுதான் அதிகபட்ச விலையாகும். முட்டையின் நுகர்வு, விற்பனை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக விலை உயர்வதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சில்லறை கடைகளில் 1 முட்டையின் விலையானது 7 ரூபாய் வரை விற்கப்பட வாய்ப்புள்ளது.
