தமிழகம் முழுவதும் நாளை SIR-ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம்… தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

எஸ்ஐஆர்-ஐ திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் எதிர்த்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது எதிர்த்து தவெக ஆர்ப்பாட்டம் அறிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, நாளை  காலை 11.00 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று கூறியுள்ளது.