2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிக்க திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்த பாமகவை அப்போது தவெக அணுகவில்லை. இருப்பினும், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய், அன்புமணி ராமதாஸை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அவ்வாறு சந்தித்துப் பேசியபோதிலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தவெக அரசின் பல்வேறு செயல்பாடுகளைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தே வருகிறார்.
இந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு மிக நெருக்கமான முக்கியப் புள்ளியொருவர் சமீபத்தில் அன்புமணியைத் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியாவை அமைச்சராக்க முதலமைச்சர் விருப்பம் தெரிவிப்பதாகவும், எனவே தவெகவுக்கு எதிரான அரசியல் நிலப்பாட்டைக் கைவிட்டு, வரவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இணையுமாறும் தூது அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுக்கு எதிராகப் பல இடங்களில் குரல் கொடுத்து வருகின்றன. மேலும், நடந்து முடிந்த தேர்தலில் திருமாவளவனின் ஆதரவின்றியே ஆதிதிராவிடர்களின் கணிசமான வாக்குகளைத் தவெக பெற்றுவிட்ட நிலையில், வடமாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகளை மேலும் வலுப்படுத்த பாமகவின் தயவு தேவை என விஜய் கருதுவதாகத் தெரிகிறது. இதனால் தற்போதைய ஆதரவுக் கட்சிகளைக் கழற்றிவிட்டு பாமகவை இணைக்கத் திட்டமிடப்படுவதாகவும், எதிர்வரும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக கூட்டணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…
ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…
குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவருக்கு…
தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…
கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த சுபி பண்டாரி என்ற பெண், புதிதாக வாங்கி 3…