நான் மட்டும் அந்த உண்மையை சொன்னா…. “ராதா கண்டிப்பா ஜெயிலுக்கு போவாரு”… அம்பிகாவின் பரபரப்பு வாக்குமூலம்… திரையுலகில் அதிர்ச்சி…..!

Spread the love

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள ரூ.47 கோடி காசோலை விவகாரம், திரைவட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ரூ.47 கோடி காசோலையைச் சகோதரி அம்பிகா தவறாகப் பயன்படுத்தியதாக ராதா புகார் அளித்திருந்த நிலையில், அதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். இருப்பினும், ராதாவின் இந்தக் குற்றச்சாட்டைப் முற்றிலும் மறுத்துள்ள அம்பிகா, தன் மீதான புகாருக்குக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அம்பிகா, “குடும்பச் சொத்துக்களைப் பிரித்த வகையில் ராதா தரப்பிலிருந்து எனக்கு ரூ. 97 கோடி வர வேண்டியுள்ளது. அதற்காகவே ராதா எனக்கு 5 காசோலைகளைக் கொடுத்தார். அதில் ஒரு ரூ. 47 கோடி காசோலையை நான் வங்கியில் செலுத்தியபோது, அவர் அதன் பரிவர்த்தனையை நிறுத்தி வைத்துள்ளார். ஏ.ஆர்.எஸ் கார்டன் யாருக்குச் சொந்தம் என்பதில் தான் எங்களுக்குள் பிரச்சனை நிலவி வருகிறது. தற்போது அந்தச் சொத்திலிருந்து எனது பெயரையும் நீக்கிவிட்டார்கள்” என்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “காசோலையைக் கொடுத்ததும் அவர்தான், அதை நிறுத்தியதும் அவர்தான்; ஆனால் என் மீது புகார் கொடுக்கிறார். ராதா கையெழுத்திட்ட செக் என் வீட்டிற்கு எப்படி வரும்? அவராகக் கொடுத்ததை நான் திருடியா வங்கியில் செலுத்தினேன்? இது குறித்து ராதாவிடம் உரிய விசாரணை நடத்தினாலே உண்மை வெளிவந்துவிடும். நான் உண்மையைப் பேசத் தொடங்கினால் ராதா சிறைக்குச் செல்ல நேரிடும்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு காலத்தில் திரையில் இணைபிரியா சகோதரிகளாக வலம் வந்த இருவருக்கு இடையேயான இந்தச் சொத்துப் பிரச்சனை தற்போது தீவிரமடைந்துள்ளது.

Nanthini

Recent Posts

“கனவாக மாறிய 10 வருட காதல்…” வேலை கிடைத்த திமிரில் காதலியை தூக்கி எறிந்த வாலிபர்…. இளம்பெண்ணின் முடிவால் கதறும் குடும்பத்தினர்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…

12 minutes ago

பெற்ற தாய் செய்யுற வேலையா இது…? சிறுமி மீது கைவைத்த கள்ளக்காதலன்…. மகள் அழுதும் கேட்காத தாய்… நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

21 minutes ago

தந்தை-மகனுக்கு பொருந்தாத DNA…! வெளிச்சத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்… இரத்த புற்றுநோய் சிகிச்சையில் வெளிவந்த பகீர் ரகசியம்…!

குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவருக்கு…

29 minutes ago

“பாத்ரூம் போகணும் சார்…” உள்ளே சென்ற கைதி… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ,,,!!

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…

43 minutes ago

“பெண்கள்னு கூட பார்க்கல…” மீன், காய்கறிகளை தூக்கி வீசி தாக்கிய அதிகாரி…. நண்பருடன் சாதி பெயரை சொல்லி ரகளை…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…

57 minutes ago