அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கும் ‘தாய்மாமன் சீர் திட்டம்’ குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் புதுவரவுகளை வரவேற்று சிறப்பிக்கும் வகையில், இத்திட்டத்தின் கீழ் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தில் எத்தனையாவது குழந்தைக்கு இந்தச் சலுகை பொருந்தும் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்த நிலையில், அதற்கு அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களாக இருந்தாலும், எந்தவிதத் தடையுமின்றி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த 1 கிராம் தங்க மோதிரம் தவறாமல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
