அதிமுகவில் அடுத்த விக்கெட்… திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி…. செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Swetha on ஆடி 27, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர் பூலாங்கால் சித்திக் தலைமையில், முக்கிய நிர்வாகிகளான மரஜிஸ் அகமத் மற்றும் இமாம் அலி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தனர். கட்சி மாறி மாற்று முகாமில் தங்களை இணைத்துக் கொண்ட இந்த நிகழ்வு விருதுநகர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிமுகவிலிருந்து திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற பிற கட்சிகளுக்குச் செல்லும் நிர்வாகிகளின் எண்ணிக்கை சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இத்தகைய தாவல் படலம் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் களத்தில் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்வது அதிமுகவின் வாக்கு வங்கியிலும் அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.