நடிகர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். கடந்த 1994-ஆம் ஆண்டு சரத்குமாரின் நாட்டாமை படத்தில் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நடிகர் பாண்டியராஜுடன் இணைந்து தாய்க்குலமே தாய்க்குலமே படத்திலும் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது மகேந்திரனுக்கு கிடைத்தது.

பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோபாலா கோபாலா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் மகேந்திரன் நடித்த விழா ஆனந்தம், விந்தை, நாடோடி கனவு, விரைவில் ஆசை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பை தரவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மகேந்திரன் பிரபலமானார்.

தற்போது மாஸ்டர் மகேந்திரன் பிரசாந்த் நாகராஜன் இயக்கிய அமிகோ கேரேஜ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற மார்ச் மாதம் 15-ஆம் தேதி அமிகோ கேரேஜ் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. நேற்று அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் பேசிய நடிகர் மகேந்திரன், நான் என்றும் ஹீரோ இல்லை. உங்கள் வீட்டு பையன் தான்.

கடந்த 30 வருடமாக எனக்கு ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள். கொரோனா காலகட்டத்தில் சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன். என்ன செய்யப் போகிறேன் என பயம் வந்தது என கூறிக்கொண்டே அழுதுவிட்டார். அதே நேரம் இயக்குனர் பிரசாந்த் முதலில் டாக்குமெண்டரி எடுக்க வேண்டும் என கூறினார்.

நான் தான் படம் எடுக்கலாம் என கூறினேன். பல கஷ்டங்களுக்கு பிறகு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதற்காக அனைவரும் அர்ப்பணிப்போடு உழைத்து உள்ளார்கள். இந்த படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள். எல்லாருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்த படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
